வேலை வேண்டுமா? வேண்டாமா? பானை தொப்பை வயிறு போலீசாருக்கு எச்சரிக்கை

கர்நாடகா மாநில ரிசர்வ் போலீஸ் தலைமை (கே.எஸ்.ஆர்.பி.) தங்கள் வேலைகள் மற்றும் அவர்களின் பானை வயிறுகளைத் தக்கவைத்துக்கொள்வது இதில் ஒன்றை தேர்ந்து எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.
வேலை வேண்டுமா? வேண்டாமா? பானை தொப்பை வயிறு போலீசாருக்கு எச்சரிக்கை
Published on

பெங்களூர்

கர்நாடக மாநில ரிசர்வ் போலீஸ் தலைமை அதிகாரி கூறும் போது அதிக எடை கொண்டவர் கண்காணிப்பில் உள்ளனர்.அவர்கள் தங்கள் கூடுதல் எடைக்காக நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என கூறி உள்ளார்.

கர்நாடகா மாநில ரிசர்வ் போலீஸ் ( கே.எஸ்.ஆர்.பி.) கூடுதல் இயக்குனர்-ஜெனரல்,பாஸ்கர் ராவ் , ஜூலை 3 ம் தேதி வெளியிட்டு உள்ள சர்குலரில் அதிக எடை உள்ள பலூன் வயிறு உள்ள பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் அடையாளம் காணப்படுவார்கள். அவர்கள் கண்டிப்பான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு உண்ண உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

போலீசார் தங்கள் பானை வயிறுகளை குறைக்க ஒரு காலக்கெடுவை வழங்கப்படும். அவ்வாறு செய்யத் தவறியவர்கள் ஒழுக்க ரீதியிலான நடவடிக்கைகளை சந்திக்க வேண்டும் என கூறி உள்ளார்.

பிளாட்டன்ஸ் கமாண்டர்கள் ஏற்கனவே தங்கள் உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) அடிப்படையிலான பணியாளர்களை அடையாளம் காணவும், கடுமையான உடற்பயிற்சிக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வழக்கமான அணிவகுப்பு மற்றும் பயிற்சிகள் தவிர, அடையாளம் காணும் நபர்கள் தங்கள் விருப்பப்படி விளையாட கட்டாய ஜாகிங் மற்றும் நீச்சல் அடிக்க கட்டாயப்படுத்தப்பட்டனர், என மூத்த போலீஸ் அதிகாரி கூறி உள்ளார்.

இந்த முடிவு போலீசாரின் வாழ்க்கை தரத்தை மேலும் மேம்படுத்தும். "ஒவ்வொரு ஆண்டும் 40-50 வயதுக்குட்பட்ட சுமார் 150 போலீஸ்காரர்கள், வாழ்க்கை முறை தொடர்பான நோய்களில் இருந்து இறக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இதய பிரச்சினைகள், இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு, மற்றும் குடிப்பழக்கம் மற்றும் புகைபிடித்தல் பழக்கங்களும் இருந்து உள்ளது. இத்தகைய இறப்பு விகிதங்கள் ஏற்கத்தக்கவை அல்ல. சில ஒழுக்கம் மற்றும் ஆரோக்கியமான உணவுகள் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தலாம், என ராவ் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com