கர்நாடகாவில் கொரோனா தொற்று பாதிப்பு நேற்றைவிட இன்று குறைந்தது

கர்நாடகாவில் கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் கொரோனா தொற்று பாதிப்பு நேற்றைவிட இன்று குறைந்தது
Published on

பெங்களூரு,

கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்த நிலையில், நேற்று தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டி அதிரவைத்தது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்திற்கும் கீழ் வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,890- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 1,631-பேர் குணம் அடைந்த நிலையில், இன்று 34 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 23,478- ஆக உள்ளது. கர்நாடகாவில் இதுவரை தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,525- ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com