கர்நாடகாவில் புதிதாக 2,010 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - மாநில சுகாதாரத்துறை தகவல்

கர்நாடகாவில் புதிதாக 2,010 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் இன்று கொரோனா பாதிப்பு குறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாநிலத்தில் இன்று புதிதாக 2,010 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் வைரஸ் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 73 ஆயிரத்து 657 ஆக அதிகரித்து உள்ளது.

கொரோனா பாதிப்பால் மேலும் 5 பேர் பலியாகினர். இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 12,449 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 677 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை குணம் அடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 45 ஆயிரத்து 594 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு தற்போது 15,595 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com