கர்நாடகாவில் புதிதாக 21,390 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 21,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பரவல் 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதன்படி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று மேலும் 10 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,541 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்புடன் 93,009 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெங்களூருவில் பாதிப்பு 15 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. பெங்களுருவில் மட்டும் 15,617 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருவதால் சுகாதாரத்துறை மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com