கர்நாடகாவில் 25 ஆயிரத்தை தாண்டிய ஒருநாள் கொரோனா பாதிப்பு

கர்நாடகாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று 25,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 25 ஆயிரத்தை தாண்டிய ஒருநாள் கொரோனா பாதிப்பு
Published on

பெங்களூரு,

கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு இந்த மாத முதலில் இருந்து தொற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இன்று கர்நாடகாவில் இன்று 25,795 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,47,997 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 123 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,885 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 5,624 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,37,857 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 1,96,236 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com