கர்நாடகாவில் இன்று மேலும் 30,309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடகாவில் இன்று மேலும் 30,309 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இன்று மேலும் 30,309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

பெஙகளூரு,

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை வேகம் எடுக்க ஆரம்பித்து உள்ளது. நாள்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கட்டுக்கு அடங்காமல் செல்லும் கொரோனா பரவலின் சங்கிலியை உடைக்க கர்நாடக அரசு ஊரடங்கை அமல்படுத்தியது.

இந்நிலையில், கர்நாடகாவில் இன்று மேலும் 30,309 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,72,374 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 525 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,838 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 58,395 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,74,487 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 5,75,028 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com