கர்நாடகாவில் மேலும் 349 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 349 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மேலும் 349 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 349 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 84 ஆயிரத்து 22 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 399 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கர்நாடகாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 36 ஆயிரத்து 926 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 9 ஆயிரத்து 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கர்நாடகாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 967 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com