கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 43- ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

தொற்று உறுதிசெய்யப்பட்ட 5 பேரும் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com