கர்நாடகா: பெங்களூருவில் காற்று மாசால் சுவாச பாதிப்பு அதிகரிப்பு; அதிர்ச்சி தகவல்

70 சதவீத நோயாளிகள் சிகரெட் புகைப்பவர்கள் இல்லை என மருத்துவர் கூறினார்.

கர்நாடகா:  பெங்களூருவில் காற்று மாசால் சுவாச பாதிப்பு அதிகரிப்பு; அதிர்ச்சி தகவல்
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு நகரின் பல பகுதிகளில் காற்று மாசுபாட்டால் சுவாச பாதிப்பு அதிகரித்து உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.

இதுபற்றி சுகாதார துறை வெளியிட்டு உள்ள செய்தியில், காற்றின் தரம் பெங்களூருவின் பல பகுதிகளில் குறைந்து வருகிறது. இதனால், பல்வேறு சுவாச பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன.

2024-ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையில் 3,891 நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். இது 2025-ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையில் 4,187 என அதிகரித்து விட்டது. இந்த பாதிப்பு, தனியார் மருத்துவமனைகளில் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்து காணப்பட்டது.

இதுதொடர்பாக மருத்துவர் கூறும்போது, இவர்களில் 70 சதவீத நோயாளிகள் சிகரெட் புகைப்பவர்கள் இல்லை. மற்ற காரணிகள் எதுவும் இல்லை. காற்று மாசுபாடே இந்த பாதிப்பு அதிகரிப்பதற்கான ஒரே காரணியாக இருக்க முடியும் என மருத்துவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com