

புதுடெல்லி,
கர்நாடக மாநிலத்தில் 3 எம்.பி. தொகுதிகளுக்கும், 2 எம்.எல்.ஏ. தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (நவம்பர்) 3ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி. ராவத் அறிவித்தார்.
இடைத்தேர்தலை சந்திக்கும் எம்.பி. தொகுதிகள் ஷிமோகா, பெல்லாரி, மண்டியா, எம்.எல்.ஏ. தொகுதிகள் ராமநகரம், ஜாம்கண்டி ஆகும்.
இந்த தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் வரும் செவ்வாய்கிழமை (9ந் தேதி) தொடங்குகிறது. 16ந் தேதி முடிகிறது. வேட்பு மனு பரிசீலனை 17ந் தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற 20ந் தேதி கடைசி நாள் ஆகும்.
ஓட்டு எண்ணிக்கை நவம்பர் மாதம் 6ந் தேதி நடக்கிறது. இன்றுமுதல் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன.