

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கெப்பல் மாவட்டத்தில் 15 பேர் கொண்ட குழுவினர் டிராக்டரில் கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தனர். டிராக்டர், கொப்பலில் உள்ள துங்கபத்ரா ஆற்றுப்பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி ஒன்று டிராக்டரின் மீது வேகமாக மோதியது.
இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், ஆற்றுப்பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், டிராக்டரில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.