

பெங்களூரு
கர்நாடகாவில் இரு வேறு சம்பவங்களில் மின்மாற்றி வெடித்த சம்பவத்தில் 5 பேர் காயம் அடைந்தனர்.
கர்நாடகாவின் பெங்களூரு நகரின் வடகிழக்கே பாகலூரு முதன்மை சாலையில் அமேசான் அலுவலகத்திற்கு முன்னால் நடைபாதையில் மின்மாற்றி ஒன்று உள்ளது.
பெண்கள், பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் என பலரும் இன்று காலை அதனை ஒட்டிய சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். வாகனங்களும் சென்றபடி இருந்தன. அப்போது திடீரென அந்த மின்மாற்றி வெடித்துள்ளது.
இதில் முகமது அப்ரோஸ் (வயது 35) என்பவர் காயமடைந்து உள்ளார். அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு கையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதேபோன்று மற்றொரு சம்பவத்தில், நேற்று மதியம் பென்னிகணஹள்ளி பகுதியில் கோக கோலா குடோன் அருகே மின்மாற்றி ஒன்று வெடித்ததில், 4 பேர் காயமடைந்தனர். பைக் ஒன்றும் சேதமடைந்தது. இந்த இரு சம்பவங்கள் தொடர்பாகவும், இதற்கான காரணம் பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.