கர்நாடகத்தில் காங்.வெற்றி பெற்றால் 100 சதவீத அர்ப்பணிப்புடன் ஆட்சி நடத்துவோம்-சசிதரூர் எம்.பி

கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் 100 சதவீத அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆட்சி நடத்துவோம் என்று முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் எம்.பி. கூறினார்.
கர்நாடகத்தில் காங்.வெற்றி பெற்றால் 100 சதவீத அர்ப்பணிப்புடன் ஆட்சி நடத்துவோம்-சசிதரூர் எம்.பி
Published on

பெங்களூரு,

 காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் எம்.பி. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பா.ஜனதா ஊழல் ஆட்சியை நடத்தியுள்ளது. இதனால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்கள்.மக்களின் பிரச்சினைகளை தீர்க்க காங்கிரஸ் சில திட்டங்களை வகுத்துள்ளது. வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு உதவித்தொகை, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங்களை அமல்படுத்த உள்ளோம். பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம். நேர்மையான ஆட்சி நிர்வாகத்தை நடத்துவோம். 40 சதவீத கமிஷன் பா.ஜனதா ஆட்சியால் மக்கள் வெறுப்பில் உள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் 100 சதவீத அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய ஆட்சி நிர்வாகத்தை நடத்துவோம். காங்கிரசில் தேர்தலுக்கு முன்பு முதல்-மந்திரி யார் என்பதை அறிவிக்கும் வழக்கம் இல்லை இவ்வாறு சசிதரூர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com