கார்த்தி சிதம்பரம் கைது : மகனை தைரியமாக இருக்குமாறு கூறிய ப.சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம் கைது. கோர்ட் வளாகத்தில் சந்தித்த மகனை தைரியமாக இருக்குமாறு ப.சிதம்பரம் கூறினார். #KartiChidambaram #INXMediaCase
கார்த்தி சிதம்பரம் கைது : மகனை தைரியமாக இருக்குமாறு கூறிய ப.சிதம்பரம்
Published on

சென்னை

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து கோர்ட் அனுமதியுடன் ஒரு நாள் விசாரணைக்கு அழைத்து சென்றது.

விசாரணை முடிந்ததும் கார்த்தி சிதம்பரம் பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். முன்னதாக அங்கு நீதிமன்ற வளாகத்தில் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்த அவர் தைரியத்துடன் இருக்க வேண்டும் என்றும் தான் இருப்பதாகவும் கூறினார்.

நீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்கள் தொடங்கியது. ஐ.என்.எக்ஸ் மீடியா இந்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் ஜெனரலாக துஷார் மேத்தா சிபிஐ சிறப்பு வழக்கறிஞராக ஆஜரானார்.

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு ஜாமீன் தர எதிர்ப்பு தெரிவித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம் செய்தது. நீதிமன்றத்தில் செல்போன் பயன்படுத்திய நளினி சிதம்பரத்திற்கு சிபிஐ தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

கார்த்தி சிதம்பரத்திடம் ஒருநாள் விசாரணையில் எந்த வாக்குமூலத்தையும் பெற முடியவில்லை. வழக்கு தொடர்பான் அடிப்படை கேள்விக்கே அவர் பதில் அளிக்க மறுக்கிறார். விசாரணையில் கார்த்தி சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை. நழுவல் போக்கு காட்டுகிறார்.

சிபிஐ தரப்பில் கார்த்தி சிதம்பரத்தை மேலும் 2 வாரம் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை விடப்பட்டது. கார்த்தி சிதம்பரம் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் சிபிஐ தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

நீதி மன்றத்தில் நேற்றிரவு கார்த்தி சிதம்பரம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் கூறினர். உடல நலம் இல்லை என தான் கூறாத நிலையில் அவர் அழைத்து செல்லப்பட்டதாக கூறப்பட்டது. மருத்துவமனை பொது வார்டில் கார்த்தி சிதம்பரம் நாள் முழுவதும் காக்க வைக்கப்பட்டதாக கூறினர்.

ஆடிட்டர் பாஸ்கரன் ஜாமீன் மனு மீது மார்ச் 7 ந்தேதி உத்தரவிடப்படும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com