

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்ட சுப்ரீம்கோர்ட்டின் தலையீட்டை மனதார வரவேற்கிறேன் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பதிவிட்டுள்ளார்.
தீபத்தூணில் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் இன்று அதிகாலை முதல் முருக பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். தீபத்தூணில் இன்று மாலை 5 மணியளவில் தீபம் ஏற்றப்பட உள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட் பிறப்பித்த உத்தரவை வரவேற்று, ஆந்திர பிரதேச துணை முதலமைச்சரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இது முருக பக்தர்களுக்குக் கிடைத்த வெற்றி; அவர்களின் வழிபாட்டு உரிமைகளையும், பாரம்பரிய மரபுகளையும் பாதுகாப்பதற்கான முக்கியமான நடவடிக்கை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தர்மத்தின் ஒளியை ஒருபோதும் மங்கச் செய்ய முடியாது; உண்மையும் நம்பிக்கையும் எப்போதும் தங்களுக்கான வழியைக் கண்டறியும். திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டு, மத மரபுகளின் புனிதத்தன்மையை நிலைநாட்டிய சுப்ரீம்கோர்ட்டின் தலையீட்டை மனதார வரவேற்கிறோம். இது முருகப்பெருமானின் பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கும் தருணம் மட்டுமல்ல; நமது தொன்மையான மரபுகளைப் பாதுகாப்பதற்கான முக்கியமான முன்னெடுப்புமாகும். சனாதன தர்மத்தையும் பக்தர்களின் மத உரிமைகளையும் பாதுகாக்கத் தொடர்ந்து சட்டப் போராட்டத்தை முன்னெடுத்து, வலுவான வாதங்களை முன்வைத்த வழக்கறிஞர் ஜெய் தீபக் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். அரோகரா! அரோகரா! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!” என்று பதிவிட்டுள்ளார்.