வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்துக்கு அனுமதி - டெல்லி கோர்ட்டு உத்தரவு

வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்துக்கு அனுமதி அளித்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

ஏர்செல்-மேக்சிஸ், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில், பிரான்சில் செயின்ட் ட்ரூப்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி செப்டம்பர் 18 முதல் 24 வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளை காண அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. இத்துடன் இங்கிலாந்தில் தங்கி பணி புரிந்து வரும் தனது மகளை சந்திக்க வேண்டும். எனவே இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டு நீதிபதி எம்.கே.நாக்பால் விசாரித்தார். இந்த மனுவுக்கு சி.பி.ஐ., அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் புதிய ஆதாரங்கள் சிக்கியுள்ளன என வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, கார்த்தி சிதம்பரம் ரூ.1 கோடி வைப்புத்தொகை அல்லது வரைவோலையாக செலுத்த வேண்டும். வெளிநாடுகளில் மேற்கொள்ள பயண விவரங்களையும், தங்கும் ஓட்டல்கள், தொடர்பு எண்களை தாக்கல் செய்ய வேண்டும் என நிபந்தனைகளை விதித்து, அவர் பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு செம்டம்பர் 17 முதல் 25 வரை செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com