

ஜம்மு,
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்தியபாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள அஹோனர் செக்டர் பகுதியில் இன்று மதியம் கண்ணி வெடிகள் வைத்திருந்த பகுதிகளை ராணுவ வீரர்கள் செயலிழக்க செய்யும் பணியை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது எல்லைப்பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த 2 பேரை சகவீரர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் ஒருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.