காஷ்மீர்: வெள்ளம், விபத்தில் சிக்கி 4 பேர் பலி

ஜம்மு மற்றும் காஷ்மீரில் லெப்டினன்ட் கர்னல் உள்ளிட்ட 2 ராணுவ வீரர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் என 4 பேர் வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்தனர்.
காஷ்மீர்: வெள்ளம், விபத்தில் சிக்கி 4 பேர் பலி
Published on

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் துர்புக் நகரில் இருந்து சோங்டாஷ் பகுதியை நோக்கி ராணுவ வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, பெரிய பாறை ஒன்று உருண்டு வந்து அவர்களுடைய வாகனம் மீது விழுந்துள்ளது.

இந்த சம்பவத்தில், ராணுவ வாகனம் நொறுங்கியது. இதில், லெப்டினன்ட் கர்னல் பானு பிரதாப் சிங் மற்றும் மற்றொரு வீரரான தல்ஜீத் சிங் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இதுதவிர, மேஜர் மயங்க் சுபம், மேஜர் அமித் தீட்சித் மற்றும் கேப்டன் கவுரவ் ஆகிய 3 பேர் காயமடைந்தனர்.

அவர்கள் மீட்கப்பட்டு, லே பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதேபோன்று காஷ்மீரில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி ஆசிரியர்களான ஜக்தேவ் சிங் தாக்குர் மற்றும் சஞ்சய் சர்மா ஆகிய இருவர் பலியானார்கள்.

கனமழை தொடர்ச்சியாக, பஹல்காம், பல்தல் முகாம்களில் இருந்து அமர்நாத் யாத்திரை செல்ல இருந்த பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதுவரை அமர்நாத் புனித குகையில் 3.93 லட்சம் பக்தர்கள் வழிபட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com