

ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் தத்ரி பகுதியில் இருந்து தோடா நோக்கி சிற்றுந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், சிற்றுந்து திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர். 12 பேர் காயமடைந்து உள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வருகின்றன என தோடா மாவட்ட கூடுதல் எஸ்.பி. கூறியுள்ளார்.
இந்த நிலையில், சிற்றுந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். காயமடைந்த நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்