

ஜம்மு,
காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டத்தில் சுந்தர்பானி என்ற இடத்தில் எல்லை பாதுகாப்பு படையின் தலைமை அலுவலகம் உள்ளது.
இங்கு ஏட்டாக பணியாற்றி வந்தவர் ராம் சரண். இவர் நேற்று மாலை பணியில் இருந்த போது திடீரென தன்னுடைய துப்பாக்கியால் தன்னைதானே சுட்டுக்கொண்டார்.
இதில் அவருடைய கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு ஓடி வந்த சக வீரர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.