

ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் அமீரா கடல் பாலம் அருகே பொதுமக்கள் அதிகளவில் இருந்த நிலையில், கையெறி குண்டு வீச்சு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் குடிமக்கள் 36 பேர் உள்பட 38 பேர் காயமடைந்தனர். இதில், பொதுமக்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், ஸ்ரீநகர் எஸ்.பி. லட்சயா சர்மா இன்று கூறும்போது, இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இதில், 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.