

ஜம்மு,
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் கூடுதல் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சத்பால் ஜஸ்வால் என்பவர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று காலை அவர் பணியில் இருக்கும்போது துப்பாக்கியால் தன்னைத்தானே திடீரென சுட்டுக்கொண்டார். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும், அவருடன் பணியாற்றிய சக அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர்.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.