காஷ்மீர் என்கவுண்ட்டர்: அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் என்கவுண்ட்டர்: அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
Published on

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் ஹதிபோரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. நேற்றிரவு முதல் தொடர்ந்து வரும் இந்த சண்டையில் அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாதியை படையினர் சுட்டு கொன்றனர்.

தொடர்ந்து இன்று நடந்த என்கவுண்ட்டரில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களை அடையாளம் காணும் பணி தொடர்கிறது. தேடுதல் வேட்டையும் நடந்து வருகிறது என காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்து உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com