'தி காஷ்மீர் பைல்ஸ்' கொச்சையான திரைப்படம் - சர்வதேச திரைப்பட விழா தேர்வுக்குழு தலைவர்

கோவாவில் 53-வது இந்திய - சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
'தி காஷ்மீர் பைல்ஸ்' கொச்சையான திரைப்படம் - சர்வதேச திரைப்பட விழா தேர்வுக்குழு தலைவர்
Published on

பனாஜி,

கோவா தலைநகர் பனாஜியில் 53-வது இந்திய-சர்வதேச திரைப்பட விழா கடந்த 20-ம் தேதி தொடங்கியது. 9 நாட்கள் நடைபெற்ற இந்த திரைப்பட திருவிழாவில் 79 நாடுகளில் இருந்து 280 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. ஆர்.ஆர்.ஆர்., ஜெய் பீம், தி காஷ்மீர் பைல்ஸ் போன்ற படங்கள் திரையிடப்பட்டன.

இந்நிலையில், இந்திய - சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய - சர்வதேச திரைப்பட விழாவின் சர்வதேச திரைப்பட போட்டி பிரிவின் தேர்வுக்குழு தலைவர் நடக் லபிட் பேசினார்.

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த திரைப்பட இயக்குனர்/தயாரிப்பாளரான நடக் லபிட் பேசியதாவது:-

15-வது திரைப்படமான 'தி காஷ்மீர் பைல்ஸ்'ஆல் நாங்கள் அனைவரும் (தேர்வுக்குழு உறுப்பினர்கள்) அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்தோம். இது பரப்புரை நோக்கம் கொண்ட கொச்சையான திரைப்படம் என்ற எண்ணம் எங்களுக்கு தோன்றியது. இது போன்ற மிகவும் மதிப்புமிக்க திரைப்படவிழாவில் போட்டி பிரிவில் இந்த படம் வந்தது சரியானது அல்ல. வாழ்க்கைக்கும், கலைக்கும் விமர்சனம் குறித்து ஆலோசிப்பது திருவிழாவின் ஆன்மா என்பதால் இந்த மேடையில் எனது உணர்வுகளை வெளிப்படையாக உங்களிடம் கூறுவதில் நான் முற்றிலும் வசதியாக உணருகிறேன்' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com