காஷ்மீர்: எல்லையில் சுற்றி திரிந்த 2 பேர் மீது துப்பாக்கி சூடு


காஷ்மீர்: எல்லையில் சுற்றி திரிந்த 2 பேர் மீது துப்பாக்கி சூடு
x
தினத்தந்தி 18 July 2024 2:08 PM IST (Updated: 18 July 2024 2:28 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு மற்றும் காஷ்மீரில் சுந்தர்பானி பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள், சந்தேக நபர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் சுந்தர்பானி பகுதியில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியருகே சந்தேகத்திற்குரிய வகையில் 2 பேர் இன்று சுற்றி திரிந்தனர்.

அவர்களை கவனித்த எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்.), இருவரையும் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதன்பின் அருகேயுள்ள நிலைகளுக்கும் இதுபற்றிய தகவலை அனுப்பி எச்சரித்தனர்.

சுந்தர்பானி பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களும் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். அந்த பகுதியில், ராணுவம் மற்றும் பி.எஸ்.எப். படையினர் கூட்டாக இணைந்து தொடர்ந்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story