காஷ்மீர்: ஜெய்ஷ்-இ-பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-பயங்கரவாதிகள் 3 பேர் பதுங்கியிருந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
காஷ்மீர்: ஜெய்ஷ்-இ-பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை
Published on

கத்துவா,

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கத்துவா மாவட்டத்தில் கஹோக் கிராமத்தில் பில்லவார் பகுதியில், காமத் நல்லா வன பகுதிக்குள் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை அடுத்து, பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு சென்றனர்.

அவர்களை கண்டதும் பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட தொடங்கினர். இதனால், வீரர்களும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால், இரு தரப்புக்கும் இடையே மாலை 6 மணியளவில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

அந்த பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-பயங்கரவாதிகள் 3 பேர் பதுங்கியிருந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுபற்றிய தகவல் போலீசாருக்கு தெரிந்ததும் உஷாரானார்கள். கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு அவர்களை ஒழிக்கும் பணி தொடர்ந்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com