

ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் தேக்வார் பிரிவில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் போர்நிறுத்த விதிகளை மீறி பாகிஸ்தான் சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் பீரங்கிகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது. இந்நிலையில், இந்திய தரப்பில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.