காஷ்மீர்: பயங்கரவாதிகளால் சுடப்பட்ட காவலர் உயிரிழப்பு

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் இன்று காலை சுடப்பட்ட காவலர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
காஷ்மீர்: பயங்கரவாதிகளால் சுடப்பட்ட காவலர் உயிரிழப்பு
Published on

புதுடெல்லி,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் அலி ஜான் சாலையில் ஐவா பாலத்தில் இன்று காலையில் குலாம் ஹசன் என்ற காவலர் சென்று கொண்டிருந்து உள்ளார். அவரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை.

இந்நிலையில், அவரை நோக்கி பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதற்கான சரியான காரணம் என்னவென்று தெரிய வரவில்லை. இதில் பலத்த காயமடைந்த குலாம், சவுரா பகுதியில் உள்ள எஸ்.கே. மருத்துவ அறிவியல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார் என இன்றிரவு தெரிவிக்கப்பட்டு உள்ளது. எல்லையில் ஊடுருவ 200 பயங்கரவாதிகள் தயார் நிலையில் உள்ளனர் என கூறப்பட்ட சூழலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி பிடிக்கும் பணி நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com