காஷ்மீரில் அதிபயங்கர கார் வெடிகுண்டு தாக்குதலை முன்னெடுக்க பயங்கரவாதிகள் திட்டம்

காஷ்மீரில் அதிபயங்கர கார் வெடிகுண்டு தாக்குதலை முன்னெடுக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர்.
காஷ்மீரில் அதிபயங்கர கார் வெடிகுண்டு தாக்குதலை முன்னெடுக்க பயங்கரவாதிகள் திட்டம்
Published on

ஸ்ரீநகர்/புதுடெல்லி,

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உதவிபெறும் பயங்கரவாதிகள் அவ்வப்போது பாதுகாப்பு படைகளை குறிவைத்து தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர். இந்திய ராணுவம் தாக்குதல்களை முறியடித்துயும் வருகிறது. சமீப காலமாக தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது.

சமீபத்திய சம்பவங்கள்:-

பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நாளன்று பிரிவினைவாதிகள் தரப்பில் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கிடையே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் எனவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.

* பிப்ரவரி 7-ம் தேதி ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் ஸ்ரீநகர் மருத்துவமனையில் தாக்குதல் நடத்தி, 2014ம் ஆண்டு குல்காமில் கைது செய்யப்பட்ட லஷ்கர் இதொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி நவீத் ஜூட்டை தப்பிக்க செய்தனர். இந்த தாக்குதலில் இரு போலீசார் கொல்லப்பட்டனர்.

* பிப்ரவரி 10-ம் தேதி சுஞ்சுவான் ராணுவ முகாமில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள், ஒரு ராணுவ வீரரின் தந்தை உயிரிழந்தனர். இதனையடுத்து காஷ்மீர் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கண்காணிப்பு அதிஉயர் உஷார் நிலைப்படுத்தப்பட்டது.

* இன்று ஸ்ரீநகரில் உள்ள மத்திய ரிசர்வ் படை போலீஸ் முகாமில் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்த முயன்ற சதி முறியடிக்கப்பட்டது. இதில் போலீசார் ஒருவர் உயிரிழந்தார்.

கார் வெடிகுண்டு தாக்குதல்

பாகிஸ்தான் பயங்கரவாதி நவீத் ஜூட்டை தப்பிக்கசெய்தது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீஸ் 4 பேரை கைது செய்து உள்ளது. இதற்கிடையே பயங்கரவாதிகளின் தொடர்ச்சியான தாக்குதலானது அங்கு பதட்டத்தை அதிகரிக்க செய்து உள்ளது. பாதுகாப்பு அதிஉயர் உஷார் நிலைப்படுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு முகமைகள் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறது.

ஏற்கனவே தற்கொலை பயங்கரவாத தாக்குதல்கள் முன்னெடுக்கப்படலாம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இப்போது கிடைத்து உள்ள தகவல்களின்படி ஒருங்கிணைந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கங்கள் அதிபயங்கரமான கார் அல்லது டிராக்டர் வெடிகுண்டு தாக்குதலை முன்னெடுக்க திட்டமிட்டு உள்ளனர் என காட்டுகிறது. பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படலாம் எனவும் உள்ளீடுகள் காட்டுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் ஏற்கனவே கடந்த 2001-ல் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் தற்கொலை கார் வெடிகுண்டு தாக்குதலை முன்னெடுத்தனர். அம்மாநில தலைமை செயலக வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 40 பேர் பலியாகினர்.

பாதுகாப்புத்துறை உயர் அதிகாரி பேசுகையில் எங்களுக்கு கிடைத்து உள்ள தகவல்களின்படி பயங்கரவாத இயக்கங்கள் மிகப்பெரிய மற்றும் அதிர்ச்சியான தாக்குதல்களை முன்னெடுக்க திட்டமிட்டு உள்ளன என தெரிகிறது. முக்கியமான இடத்தில் வெடிகுண்டுகள் நிறப்பப்பட்ட வாகனங்களை வெடிக்க செய்ய திட்டமிட்டு உள்ளனர். அரசு அதிகாரிகள் குடியிருப்பு, உயர்மட்ட ராணுவ அதிகாரிகள், ராணுவ தளம், ஓட்டல் அல்லது ஜம்மு காஷ்மீர் தலைமை செயலகத்தில் தாக்குதலை முன்னெடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது, என கூறிஉள்ளார்.

ஸ்ரீநகர் மருத்துவமனை தாக்குதலில் தப்பி ஓடிய பாகிஸ்தான் பயங்கரவாதி நவீத் இதற்கான தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com