கவின் ஆணவக்கொலை வழக்கு: தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

கிரிமினல் வழக்கை தமிழக அரசு சரியாக கையாளவில்லை என்றும் சுப்ரீம் கோர்ட் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்
சுப்ரீம் கோர்ட்
Published on: 

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ், காதல் விவகாரத்தில் கடந்த 2025 ஜூலை மாதம் 27-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். சாதிய நோக்கத்தோடு இந்தக் கொலை நடைபெற்றதாகக் கூறப்பட்ட நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, பெண்ணின் சகோதரர் சுர்ஜித்தை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் காவல்துறை உதவி ஆய்வாளர்களான பெண்ணின் தாய் கிருஷ்ணகுமாரி, பெண்ணின் தந்தை சரவணன் மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோரும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்ததையடுத்து, அவர்களும் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, கைது செய்யப்பட்ட சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோருக்கு எதிராக தகுந்த ஆதாரங்கள் இல்லை என கூறி, அவர்கள் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது.

.இந்தச் சூழலில், அந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மேலும், கிரிமினல் வழக்கை தமிழக அரசு சரியாக கையாளவில்லை என்றும் சுப்ரீம் கோர்ட் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

X