குடிசையில் இருந்தவரை கோபுரத்தில் வைப்பது தான் பாஜக: தெலுங்கானாவை அதிர வைத்த அமித்ஷா பிரசாரம்

தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, "குடிசையில் இருந்த ராமரை கோபுரத்தில் வைக்கிறோம்" என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
குடிசையில் இருந்தவரை கோபுரத்தில் வைப்பது தான் பாஜக: தெலுங்கானாவை அதிர வைத்த அமித்ஷா பிரசாரம்
Published on

ஐதரபாத்,

தெலுங்கானாவில் மொத்தம் 119 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இங்கு பாரத் ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. தேர்தலையொட்டி இந்த கட்சி 115 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. காங்கிரசும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. ஆனால் பாஜக சார்பில் வேட்பாளர்களை அறிவிப்பதில் தொடர் தாமதம் ஏற்பட்டது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக இதுவரை 6,000 பேர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளதாகவும், இதனை ஷார்ட் லிஸ்ட் செய்வே தாமதம் என்று சொல்லப்பட்டது. இதனையடுத்து வேட்பாளர்களை மூன்று கட்டங்களாக அறிவிக்கப்படும் என கூறிய பாஜக கடந்த 22ம் தேதி 52 பெயர்களை கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

கடந்த 1ம் தேதி பிரதமர் மோடி தெலங்கானவுக்கு நேரடியாக விசிட் செய்து பிரசாரத்தை தொடங்கினார். இதனையடுத்து ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமித்ஷா,

"கடவுள் ராமர் சுமார் 550 ஆண்டுகளாக குடிசையில் இருந்தார். ஆனால் இப்போது அயோத்தியில் ராமருக்கான பிரமாண்ட கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியோ, பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியோ எந்தவித வளர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுதான் இங்கு வளர்ச்சியை கொண்டுவந்தது. தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தனது மகன் கே.டி.ராமா ராவ்வை முதல்வராக நினைக்கிறார். சோனியா அவரது மகன் ராகுலை பிரதமராக நினைக்கிறார். ஆனால் பாஜக வெற்றிபெற்றால் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரையே முதல்-மந்திரியாக நியமிப்போம்.

கடவுள் ராமர் சுமார் 550 ஆண்டுகளாக குடிசையில் இருந்தார். ஆனால் இப்போது அயோத்தியில் அடுத்தாண்டு ஜனவரி மாம் 22ம் தேதி ராமருக்கான பிரமாண்ட கோயில் திறக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி அதனை திறந்து வைத்து தரிசனம் செய்ய உள்ளார் என்று கூறியுள்ளார். தெலுங்கானாவில் அடுத்த மாதம் 30-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 30-ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com