கேதர்நாத்: நடுவழியில் உடைந்த வால் பகுதி; ஹெலி ஆம்புலன்ஸ் அவசர தரையிறக்கம்

ஹெலி ஆம்புலன்ஸ் வால் பகுதியில் உள்ள இறக்கை உடைந்ததும் உடனடியாக தரையிறக்கப்பட்டதில் 3 பேர் உயிர் தப்பினர்.
கேதர்நாத்: நடுவழியில் உடைந்த வால் பகுதி; ஹெலி ஆம்புலன்ஸ் அவசர தரையிறக்கம்
Published on

ருத்ரபிரயாக்,

கேதர்நாத்தில் புனித பயணம் மேற்கொள்வதற்காக பலர் சென்றுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு சுவாச பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவருக்கு சிகிச்சையளித்து மீட்டு கொண்டு வருவதற்காக ரிஷிகேஷ் நகரில் இருந்து ஹெலி ஆம்புலன்ஸ் ஒன்று இன்று புறப்பட்டு சென்றது. அதில், 2 டாக்டர்கள் மற்றும் விமானி ஒருவர் இருந்தனர்.

இந்நிலையில், திடீரென வழியில் அந்த ஹெலி ஆம்புலன்ஸ் வால் பகுதியில் உள்ள இறக்கை உடைந்தது. இதனால், உடனடியாக கேதர்நாத் பகுதியிலேயே ஹெலி ஆம்புலன்ஸ் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.

இதனால், 3 பேரும் அதிர்ஷ்டவசத்தில் உயிர் தப்பினர். இதனை மாவட்ட சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரி ராகுல் சவுபே கூறியுள்ளார். அவர் ஹெலி சேவைக்கான ஒருங்கிணைப்பு அலுவலராகவும் இருந்து வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com