கேதர்நாத் கோவிலில் தரிசனம் - 7 லட்சத்தை தாண்டிய பக்தர்களின் எண்ணிக்கை


கேதர்நாத் கோவிலில் தரிசனம் - 7 லட்சத்தை தாண்டிய பக்தர்களின் எண்ணிக்கை
x

கேதர்நாத் யாத்திரை என்பது இந்து மதத்தின் நான்கு மிக முக்கியமான யாத்திரைகளில் ஒன்றாகும்.

ருத்ரபிரயாக்,

சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் கேதார்நாத் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வந்து ஈசனை தரிசித்துச் செல்கின்றனர். இமயமலைத் தொடரில் மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கேதர்நாத் கோவில் குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள ஆறு மாதங்கள் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும்.

இந்த நிலையில், கடந்த மே மாதம் 2-ம் தேதி கேதர்நாத் கோவில் நடை திறக்கப்பட்டது. இந்நிலையில் கோவில் நடை திறக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை கோவிலுக்கு வருகை தந்துள்ள பக்தர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 31-ம் தேதி நிலவரப்படி, குதிரைகள் மற்றும் கோவேறு கழுதைகள் மூலம் சுமார் 1,39,444 யாத்ரீகர்கள் தரிசனத்திற்காக வந்துள்ளதாக தலைமை அதிகாரி டாக்டர் ஆஷிஷ் ராவத் தெரிவித்தார்.

கேதர்நாத் யாத்திரை என்பது இந்து மதத்தின் நான்கு மிக முக்கியமான யாத்திரைகளில் ஒன்றாகும். இது ஒட்டுமொத்தமாக சார் தாம் யாத்திரை அதாவது நான்கு புனித தலங்களுக்கான யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. அதன்படி இந்த பயணத்தில் கேதார்நாத் மட்டுமின்றி பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய புனித தலங்களுக்கும் பயணிக்கலாம், இவை அனைத்தும் புனித கங்கை நதியின் கரையில் அமைந்துள்ளன.

இந்த யாத்திரைக்கான மிகவும் பிரபலமான பாதை ஹரித்வாரில் இருந்து தொடங்கி நான்கு தலங்களையும் உள்ளடக்கிய பிறகு அதே இடத்தில் முடிகிறது. இந்த புனித இடங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன - கேதர்நாத்தில் சிவன், பத்ரிநாத்தில் விஷ்ணு, கங்கோத்ரியில் கங்கை மற்றும் யமுனோத்ரியில் யமுனா தேவியை வழிபடலாம்.

மேற்குறிப்பிடப்பட்ட நான்கு புனித தலங்களுக்கான யாத்திரையை ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் மேற்கொள்கின்றனர். அதற்கு ஒவ்வொருவரும் முன்பதிவு செய்துகொள்வதும் அவசியம் ஆகும்.

1 More update

Next Story