குளிர்காலம் தொடங்கியதையடுத்து கேதார்நாத் கோவில் நடை அடைப்பு

குளிர்காலத்தில் கேதார்நாத் கோவில் முழுவதும் பனியால் சூழப்பட்டுவிடும் என்பதால் ஆறு மாதங்களுக்கு நடை சாத்தப்படுவது வழக்கம்.
குளிர்காலம் தொடங்கியதையடுத்து கேதார்நாத் கோவில் நடை அடைப்பு
Published on

உத்தரகாண்ட்,

உத்தரகாண்ட் மாநிலத்தின் இமயமலையில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் அமைந்துள்ளது. குளிர்காலத்தில் கேதார்நாத் கோவில் முழுவதும் பனியால் சூழப்பட்டுவிடும் என்பதால் ஆறு மாதங்களுக்கு நடை சாத்தப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், கேதார்நாத் கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு நிலவி வரும் சூழலில் கோவிலின் கதவுகள் அடைக்கப்பட்டு உள்ளது. இந்நிகழ்வின்போது கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 2,300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, சிவபெருமானை வழிபட்டதாக பத்ரிநாத்-கேதார்நாத் கோவில் கமிட்டி தலைவர் அஜேந்திர அஜய் தெரிவித்துள்ளார்.

கோவிலின் நடை சாத்தப்பட்ட பிறகு கேதார்தாத் சிவனின் பஞ்சமுக விக்கிரகம் பல்லக்கில் எடுத்துச் செல்லப்பட்டது. உகிமடம் பகுதியில் உள்ள ஓம்காரேஸ்வர் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும் இந்த விக்கிரகம், குளிர்காலம் முழுவதும் அங்கு வழிபடப்படும். கேதார்நாத் கோவிலில் நடப்பாண்டில் 19.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டதாக அஜேந்திர அஜய் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com