கீழடி விவகாரம்: தமிழ்நாடு அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது..? - மத்திய மந்திரி கேள்வி

தமிழ்நாடு பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
கீழடி விவகாரம்: தமிழ்நாடு அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது..? - மத்திய மந்திரி கேள்வி
Published on

புதுடெல்லி,

மத்திய கலாசாரத் துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் அவர்களே, நாங்கள் எந்த அறிக்கையையும் வெளியிட சிறிதும் தயங்கவில்லை. உண்மையில், இதுபோன்ற ஆராய்ச்சிகள், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், நாங்களும் தங்களுடன் சேர்ந்து பெருமைகொள்வோம். ஆனால் இன்றைய அறிவியல் உலகின் ஏற்றுக்கொள்ளலுக்கு, எங்களுக்கு இன்னும் அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை.

அதனால்தான், அகழ்வாராய்ச்சி தரவுகளை அரசியலாக்க அவசரப்படுவதற்குப் பதிலாக, அறிவியல் பூர்வமான கூடுதல் தரவுகள் கிடைக்கும் அளவிற்கு ஆராய்ச்சியினை தொடர விரும்பும் மத்திய அரசிற்கு ஆதரவளிக்குமாறு, தமிழக அரசிடம் நாங்கள் கேட்டுக் கொண்டோம். தமிழக அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

தமிழ்நாடு பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் - பிரிவினை உணர்வுகள் மூலம் அல்லாமல், நேர்மையான அறிவின் மூலம் அதன் பாரம்பரியத்தை பெருமைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com