ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக கெஜ்ரிவால் 3வது முறையாக தேர்வு

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக கெஜ்ரிவால் 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக கெஜ்ரிவால் 3வது முறையாக தேர்வு
Published on

புதுடெல்லி,

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் 3வது முறையாக இந்த பதவிக்கு தேர்வாகி உள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அக்கட்சியில், ஒருவர் 2 முறைக்கும் கூடுதலாக ஒரு பதவியை வகிப்பதற்கான சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதேபோன்று, 2 முறை தேசிய செயலாளராக பதவி வகித்த பங்கஜ் குப்தா மீண்டும் அந்த பதவிக்கு இன்று தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com