பொது பணி துறை ஊழல் வழக்கு; டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலின் உறவினருக்கு 2 நாள் போலீஸ் காவல்

பொது பணி துறை ஊழல் வழக்கில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலின் உறவினருக்கு 2 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டு உள்ளது. #ArvindKejriwal
பொது பணி துறை ஊழல் வழக்கு; டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலின் உறவினருக்கு 2 நாள் போலீஸ் காவல்
Published on

புதுடெல்லி,

டெல்லியின் வடமேற்கில் கழிவுநீர் திட்டம் ஒன்றை செயல்படுத்துவதில் நிதி முறைகேடுகள் செய்தது கண்டறியப்பட்டது. நிறைவேற்றப்படாத பணிகளுக்காக, பொது பணி துறைக்கு அனுப்பப்பட்ட பில்கள் போலியாக தயாரிக்கப்பட்டு உள்ளன என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனை தொடர்ந்து 3 நிறுவனங்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவாகி உள்ளது. இதில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் உறவினரான சுரேந்தர் பன்சாலுக்கு சொந்தமுடைய நிறுவனம் ஒன்றிற்கும் தொடர்பு உள்ளது என தெரிய வந்துள்ளது.

ரேனு கன்ஸ்டிரக்சன்ஸ் (பன்சால், கமல் சிங் மற்றும் பவன் குமார் ஆகியோருக்கு சொந்தமுடையது) என்ற நிறுவனம் அதில் ஒன்றாகும். இந்த நிலையில் பன்சாலின் மகன் வினய் பன்சாலை லஞ்ச ஒழிப்பு துறையினர் கடந்த 10ந்தேதி கைது செய்தனர்.

இதுபற்றிய வழக்கை கூடுதல் செசன்ஸ் நீதிபதி சஞ்சய் கனக்வால் இன்று விசாரணை மேற்கொண்டார். அதில் பன்சாலை விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கினார். அதன்படி வினய் பன்சாலிடம் போலீசார் 2 நாட்கள் விசாரணை மேற்கொள்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com