

புதுடெல்லி,
டெல்லி மதுபான கெள்கை தெடர்புடைய சட்ட விரேத பணப் பரிமாற்ற வழக்கில் அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலை, கடந்த மாதம் 26ம் தேதி சிபிஐ-யும் இதே வழக்கில் கைது செய்தது. ஏற்கெனவே, அமலாக்கத் துறை கைது நடவடிக்கையிலிருந்து ஜாமீன் கேரி சுப்ரீம் கோர்ட்டை நாடியிருந்த நிலையில் தற்பேது சிபிஐ-யும் கைது செய்ததால் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றார்
இதற்கிடையே, இந்த வழக்கில் சிபிஐ தன்னை கைது செய்ததை எதிர்த்தும், தன்னிடம் விசாரணை நடத்துவதற்கு எதிராகவும் டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனுவை இன்று விசாரித்த டெல்லி இது தெடர்பாக 7 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு சிபிஐ-க்கு நேட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதேடு, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தது.