

புதுடெல்லி,
டெல்லி மாநகராட்சி தேர்தலில் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள முதல்-மந்திரி கெஜ்ரிவால், மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'எங்களுக்கு மத்திய அரசின் உதவி தேவை. பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் ஆசீர்வாதம் வேண்டும்' என தெரிவித்தார்.