கேரளா: புதிய வகை கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு

கேரளா மாநிலத்தில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது.
கேரளா: புதிய வகை கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு
Published on

திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் புதிய வகை கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர் ) முதல் 8 நாட்களில் புதிதாக 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய அளவில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கேரளாவில் நேற்று ஒரே நாளில் 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளா மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 41 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com