தெருநாய்கள் தாக்கியதில் 9 வயது சிறுமி பலத்த காயம்

சிறுமியின் சத்தம் கேட்டு ஒரு முதியவர் சத்தம் போட்டதும் நாய்கள் ஓடிவிட்டன. சிறுமி தற்போது, ​​தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தெருநாய்கள் தாக்கியதில் 9 வயது சிறுமி பலத்த காயம்
Published on

கண்ணூர்

கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ள முழப்பிலங்காட்டில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இங்கு ஜான்வி என்ற ஒன்பது வயது சிறுமி தெருநாய்களின் கூட்டத்தால் தாக்கப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

ஏற்கனவே இந்த பகுதியில் தெருநாய்கள் கடித்து சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்து உள்ளான்.

சிறுமி ஜான்வி தனது வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மூன்று தெருநாய்கள் சிறுமியை கடித்து குதறியது. இதில் சிறுமி அலறி துடித்து உள்ளார். நாய்கள் சிறுமியின் கைகள், கால்கள் மற்றும் தலை முழுவதும் பலமுறை கடித்து உள்ளது.

சிறுமியின் சத்தம் கேட்டு ஒரு முதியவர் சத்தம் போட்டதும் நாய்கள் ஓடிவிட்டன. சிறுமி தற்போது, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த ஜூன் 11ஆம் தேதி முழப்பிலங்காட்டில் தெருநாய்களால் நிகால் என்ற பத்து வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தான்.இதையடுத்து, அப்பகுதியில் தெருநாய்களை பிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, உள்ளூர் அதிகாரிகளால் 31 நாய்கள் பிடிக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com