

கோழிக்கூடு,
பிரபல மலையாள நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு தெடர்ந்து நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதுதெடர்பான விசாரணை அறிக்கையை வரும் 30ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே நடிகை தரப்பு கேரள அரசு மற்றும் விசாரணை நீதிபதிக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் நடிகர் திலீப்புக்கும், ஆளுங்கட்சியை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களுக்கும் இடையே நெருங்கிய உறவு உள்ளதாகவும், விசாரணை நீதிபதியின் பல நடவடிக்கைகளும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணைக்கான காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என்றும், நடிகையின் மனுவுக்கு வரும் வெள்ளிக்கிழமைக்குள் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.