கேரளா: திருமணம் முடிந்த கையோடு... ஜனநாயக கடமையாற்றிய புதுமண தம்பதி

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதே சமூகத்திற்குத் நாங்கள் கூற விரும்பும் செய்தி என புதுமண தம்பதி கூறினர்.
கேரளா: திருமணம் முடிந்த கையோடு... ஜனநாயக கடமையாற்றிய புதுமண தம்பதி
Published on

வயநாடு,

கேரளாவில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாநிலத்தின் பத்தினம்திட்டா மாவட்டத்தில் ஒரு புதுமண தம்பதிகளான திவ்யஸ்ரீ மற்றும் அஷ்வந்த், திருமணம் முடிந்த கையோடு, நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது வாக்கை பதிவுசெய்தனர்.

இதுகுறித்து அஷ்வந்த் கூறுகையில்,

வாக்குப்பதிவு தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே ஜனவரி மாதத்திலேயே எங்களது திருமணத் தேதி முடிவுசெய்யப்பட்டுவிட்டது. எனவே, இரண்டு தேதிகளும் ஒரே நாளில் அமைந்தது ஒரு தற்செயல் நிகழ்வு. நான் மாநிலத்திற்கு வெளியே பணிபுரிந்து வந்ததால் பல தேர்தல்களின் என்னால் வாக்களிக்க முடியவில்லை. ஆனால் இன்று வாக்களித்தது மகிழ்ச்சியளிக்கிறது. தனது மனைவி எப்போதும் தவறாமல் தனது ஜயநாயக கடைமையை ஆற்றி வருகிறார். அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதே சமூகத்திற்குத் நாங்கள் கூற விரும்பும் செய்தி.”

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com