

திருவனந்தபுரம்
கேரளாவில் 140 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைபெற்று வருகிறது. முதல் மந்திரி பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சி.ரகுநாத் போட்டியிடுகிறார்.
பினராயி விஜயன் தனது தர்மடம் தொகுதியில் இன்று வாக்களித்தார். காலை 10.05 மணி வரை கேரளாவில் 21.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. தற்போது 12.05 மணி நிலவரப்படி 38 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் வாக்களித்தார்