கேரள சட்டசபை தேர்தல்: 81 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

கேரள சட்டசபைக்கு அடுத்த மாதம் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
கேரள சட்டசபை தேர்தல்: 81 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு
Published on

திருவனந்தபுரம்,

140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபைக்கு அடுத்த மாதம் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

கேரளாவில் இடதுசாரிகளான இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் இடது ஜனநாயக முன்னணி என்ற கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன. மாநில முதல்-மந்திரியாக பினராயி விஜயன் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், கேரள சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி 81 வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது. மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் மீண்டும் போட்டியிட உள்ளார். தற்போது எம்.எல்.ஏ.வாக 56 பேருக்கு வரும் தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 11 பேர் மந்திரிகள் ஆவர்.

முன்னதாக, இடது ஜனநாயக முன்னணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஏற்கனவே 25 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com