

திருவனந்தபுரம்,
கேரளத்தில் நேற்று சட்டசபை சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி சார்பில் கோட்டயம் தொகுதி எம்.எல்.ஏ. திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன், இடது ஜனநாயக முன்னணி சார்பில் வேட்பாளர் ஏ.சி.மொய்தீன், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் கோபகுமார் ஆகியோர் போட்டியிட்டனர்.
சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணனுக்கு 101 வாக்குகளும், மொய்தீனுக்கு 35 வாக்குகளும், கோபகுமாருக்கு 3 வாக்குகளும் கிடைத்தன.
இதையடுத்து திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் சபாநாயகர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் சபாநாயகராக பொறுப்பு ஏற்றார்.