கேரளாவில் விமரிசையாக நடைபெற்ற படகு போட்டி - பள்ளாதுருத்தி அணி ஹாட்ரிக் வெற்றி

'ஒலிம்பிக்ஸ் ஆன் வாட்டர்' என்று அழைக்கப்படும் 68-வது படகு பந்தயப்போட்டி புன்னமடா ஏரியில் இன்று நடைபெற்றது.
கேரளாவில் விமரிசையாக நடைபெற்ற படகு போட்டி - பள்ளாதுருத்தி அணி ஹாட்ரிக் வெற்றி
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் நடைபெறும் படகுப்போட்டிகள் உலக அளவில் பிரசித்தி பெற்றது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் புன்னமடா ஏரியில் நடைபெறும் நேரு டிராபி படகுப்போட்டியை காண உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருவது வழக்கம். அதிலும் இங்கு நடைபெறும் பாம்பு படகுகள் (150 அடி நீளமுள்ள படகில் சுமார் 100 துடுப்பு மனிதர்களால் இயக்கப்படுகின்றன) இந்த அணிவகுப்பு மிகவும் சிறப்பாக இருக்கும்.

கேரலாவில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு 'ஒலிம்பிக்ஸ் ஆன் வாட்டர்' என்று அழைக்கப்படும் 68-வது படகு பந்தயப்போட்டி புன்னமடா ஏரியில் இன்று நடைபெற்றது. இதில் 20 பாம்பு படகுகள் உள்பட 77 படகுகள் பங்கேற்றன. இன்று மதியம் 2.30 மணிக்கு, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் போட்டியை தெடங்கி வைத்தார்.

தொடக்க விழாவுக்குப் பிறகு, போட்டிகள் 3 மணிக்குத் தொடங்கியது. போட்டியை காண ஏராளமானோர் கேரளா வந்துள்ளதால் போட் ஹவுசுகள், ஓட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகள் நிறைந்தன. இன்று நடைபெற்ற போட்டியில் பள்ளாதுருத்தி அணி ஹாட்ரிக் வெற்றி பெற்ற நேரு கோப்பையை கைப்பற்றியது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com