

கண்ணூர்
கேரளாவில் கண்ணூர் விமான நிலையத்திற்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. இதுபற்றி போலீசார் கூறும்போது, விமான நிலையத்தின் பல்வேறு இ-மெயில் ஐ.டி.க்களுக்கும் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் 2 பேருக்கு தலா ஒரு இ-மெயிலும் வந்துள்ளது.
அதில், விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என்றும் அதனை வெடிக்க செய்து விமான நிலையம் தரைமட்டம் ஆக்கப்படும் என்றும் மிரட்டல் விடப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து, மத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். கேரள போலீஸ் சட்டம், தகவல் தொழில் நுட்ப சட்டம் மற்றும் பி.என்.எஸ். சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் புகார் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. இதனையடுத்து, மிரட்டல் விடுத்த மர்ம நபர் பற்றி கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.