கேரளா: கார் - மினிவேன் மோதி விபத்து - பதறவைக்கும் வீடியோ

காரின் சக்கரம் திடீரென வெடித்ததால் முன்னால் சென்ற மினிவேன் மீது கார் மின்னல் வேகத்தில் மோதியது.
கேரளா: கார் - மினிவேன் மோதி விபத்து - பதறவைக்கும் வீடியோ
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மேலசவ் பகுதியில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது காரின் சக்கரம் திடீரென வெடித்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் முன்னால் சென்ற மினி வேன் மீது மின்னல் வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் மினி வேன் தலைகீழாக கவிழ்ந்து சுமார் 15 அடி தூரம் வரை இழுத்து செல்லப்பட்டு, எதிரே வந்த பேருந்தில் மோதி நின்றது.

இந்த விபத்தில் மினிவேனில் பயணித்த 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்த போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். காரின் சக்கரம் வெடித்து மினி வேன் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்த சமபவம் கண்ணூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், கார் - மினி வேன் மோதி விபத்துக்குள்ளான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com