சீன அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்பிங்குக்கு கேரள முதல்-மந்திரி வாழ்த்து

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் விடுத்து உள்ள வாழ்த்து செய்தியில், சர்வதேச அரசியலில் முக்கிய குரலாக சீனா உயர்ந்து உள்ளது உண்மையில் புகழத்தக்கது என தெரிவித்து உள்ளார்.
சீன அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்பிங்குக்கு கேரள முதல்-மந்திரி வாழ்த்து
Published on

திருவனந்தபுரம்,

சீனாவின் அதிபராக மூன்றாவது முறையாக ஜீ ஜின்பிங் போட்டியின்றி நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்டார். 2,952 வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற அவர், சீனாவின் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், சீன அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்பிங்குக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இன்று தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி பினராயி விஜயன் டுவிட்டரில் விடுத்து உள்ள வாழ்த்து செய்தியில், சீன மக்கள் குடியரசின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் ஜீ ஜின்பிங்குக்கு புரட்சிகர வாழ்த்துகள்.

சர்வதேச அரசியலில் முக்கிய குரலாக சீனா உயர்ந்து உள்ளது உண்மையில் புகழத்தக்கது. இன்னும் வளம் மிகுந்த நாடாக சீனா சாதனை படைப்பதற்கான தொடர் முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.

சீனாவின் துணை பிரதமராக இருந்த ஹான் ஜெங் அந்நாட்டின் துணை ஜனாதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். இதேபோன்று, சீனாவின் ஷாங்காய் கட்சி செயலாளரான லி கியாங் புதிய பிரதமர் பதவிக்கு நேற்று நியமிக்கப்பட்டு, சீன நாட்டின் புதிய பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com